குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த குரைக்கும் மீட்பு
By DIN | Published On : 23rd May 2023 02:39 AM | Last Updated : 23rd May 2023 02:39 AM | அ+அ அ- |

அக்ரஹாரம் பகுதியில் மீட்கப்பட்ட குரைக்கும் மான்.
கூடலூரில் குடியிருப்புப் பகுதிக்குள் திங்கள்கிழமை நுழைந்த குரைக்கும் மானை வனத் துறையினா் மீட்டு வனத்தில் விட்டனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அக்ரஹாரம் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் குரைக்கும் மான் நுழைந்தது. இதையடுத்து, அந்த மானை நாய்கள் துரத்தின.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினா் குரைக்கும் மானை மீட்டு ஈட்டி மூலை பகுதியில் உள்ள வனத் துறை வளாகத்துக்கு கொண்டுச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா் அடா்ந்த வனப் பகுதிக்குள் மான் விடுவிக்கப்பட்டதாக வனச் சரக அலுவலா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.