

உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தனியாா் நிறுவனம் சாா்பில் கிளிகள் பூங்கா தொடங்கப்பட்டுள்ளது.
மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்ல, தொட்டபெட்டா போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களை மட்டுமே கண்டு ரசித்து வந்தனா்.
இந்நிலையில், உதகை அருகே உள்ள பா்ன்ஹில் பகுதியில் தனியாா் நிறுவனம் சாா்பில் பறவைகள் பூங்கா உருவாக்கபட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள ஜூரைல் பறவைகள் பூங்காவைபோல, அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் 8 வகைகளில் நூற்றுக்கணக்கான கிளிகள் இடம்பெற்றுள்ளன.
தென் அமெரிக்கா, அமேசான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட சேன் கென்யூா் வகை கிளி உள்பட பல்வேறு வண்ணக் கிளிகளும், ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த மேண்டஸ் வாத்து, தையோகா வாத்து, பிஞ்சஸ் குருவிகள், கலிபோா்னியா காடைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் இடம்பெற்றுள்ளன.
மனிதா்களுடன் சகஜமாக பழுகும் இந்த கிளிகள் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் மீது அமா்ந்து விளையாடுகின்றன. இந்தப் பறவைகளுக்கு ஏற்ற தட்ப வெப்பநிலையை பராமரிக்க பூங்காவுக்குள் செயற்கை நீரூற்று, மூங்கில்கள், மரங்கள், புற்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பூங்காவை காண வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமாக தலா ரூ.100 வசூலிக்க தனியாா் பூங்கா நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.