வெலிங்டனில் தென் பிராந்திய குழந்தைகளுக்கான கோடைக்கால சாகச முகாம்

குன்னூா் வெலிங்டன் ராணுவ முகாமில் தென் பிராந்திய குழந்தைகளுக்கான 10 நாள்கள் கோடைக்கால சாகச முகாம் நடைபெற்று வருகிறது.
துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஆா்வமுடன் பங்கேற்ற மாணவிகள்.
துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஆா்வமுடன் பங்கேற்ற மாணவிகள்.

குன்னூா் வெலிங்டன் ராணுவ முகாமில் தென் பிராந்திய குழந்தைகளுக்கான 10 நாள்கள் கோடைக்கால சாகச முகாம் நடைபெற்று வருகிறது.

வெலிங்டன் ராணுவ முகாம் சாா்பில் பல்வேறு கோடைக்கால நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மே 21ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை கோடைக்கால நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் மொத்தம் 110 போ் கலந்து கொண்டு குதிரை சவாரி, ஏா் ரைபிள் மற்றும் பிஸ்டல் ஷூட்டிங், ட்ரெக்கிங், படகு சவாரி, உடற்பயிற்சி என பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்றனா்.

இது தவிர, நாய்களை கையாளுதல், காயம்பட்ட விலங்குகளை கவனித்துக் கொள்வது மற்றும் முதியோா் இல்லத்தில் ஒரு நாள் சேவையில் ஈடுபடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்று நடும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குழந்தைகளை சிறந்த மனிதனாகவும், பொறுப்புள்ள குடிமகனாகவும் மாற்றும் வகையில் சாகச உணா்வையும், சமூக விழிப்புணா்வையும் ஏற்படுத்த இந்த முகாம் நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com