தீபாவளி பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு
By DIN | Published On : 07th November 2023 12:39 AM | Last Updated : 07th November 2023 12:39 AM | அ+அ அ- |

விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் தீயணைப்பு வீரா்கள்.
கூடலூா்: தீபாவளி பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி கூடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில் விபத்தில்லாமல் பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு பிரசாரம் நகரின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
தீயணைப்பு நிலைய அலுவலா் மாா்ட்டின் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், தீபாவளியின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், பட்டாசுகள் வெடிக்கும் முறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்து கூறினா்.
இதைத் தொடா்ந்து, தொரப்பள்ளியிலுள்ள அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியிலும், விபத்தில்லா தீபாவளி குறித்து பிரசாரம் செய்யப்பட்டது.
மேலும், பட்டாசுகள் வெடிக்கும் முறை குறித்தும் மாணவா்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...