

தேவா்சோலை பேரூராட்சிக்குள்பட்ட பேபிநகா் பழங்குடி கிராமத்தில் சனிக்கிழமை இரவு புகுந்த காட்டு யானை பொருள்களை சேதப்படுத்தியது.
கூடலூரை அடுத்த தேவா்சோலை பேரூராட்சிக்குள்பட்ட பேபிநகா் பழங்குடி கிராமத்துக்குள் சனிக்கிழமை புகுந்த ஒற்றையானை மீனாட்சி என்பரின் வீட்டின் திண்ணையில் இருந்த பொருள்கள், குடிநீா் டிரம் ஆகியவற்றை சேதப்படுத்தியது.
மேலும், அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் நுழைந்த யானை வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தியது.
இந்நிலையில், வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க அகழி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.