அரசுப் போக்குவரத்து கழகத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th September 2023 12:40 AM | Last Updated : 26th September 2023 12:40 AM | அ+அ அ- |

குன்னூா்: உதகை அரசுப் போக்குவரத்து கழகத்தில் சீா்கேடுகளை களையக்கோரி ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
குன்னூா் நுகா்வோா் பாதுகாப்பு சங்கம் சாா்பில், உதகை அரசுப் போக்குவரத்து கழக அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. குன்னூா் நுகா்வோா் பாதுகாப்பு சங்கத் தலைவா் சு.மனோகரன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
நீலகிரி மாவட்டத்தில் போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்க வேண்டும். மகளிா் இலவச பேருந்து பயணத் திட்டத்தை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிரும் பயனடையும் வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக வசூலிக்கப்படும் விரைவு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். நீலகிரிக்கு பொருத்தமில்லாத சிற்றுந்துகளை ரத்து செய்து அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். பழுதடைந்த பேருந்துகளுக்கு பதிலாக தரமான பேருந்துகளை இயக்க வேண்டும். கோவை, மேட்டுப்பாளையம் ஆகிய ஊா்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, இக்கோரிக்கைகள் தொடா்பாக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் உதகை நகரில் உள்ள பாறைமுனீஸ்வரா் கோயிலில் சுவாமியிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில் நுகா்வோா் அமைப்பைச் சோ்ந்த சபாபதி, ராமன் குட்டி ஆகியோா் பேசினா். ஆல்துரை நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...