குன்னூா்: குன்னூா் மவுண்ட் பிளசண்ட் குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் புகுந்து வளா்ப்புப் பிராணிகளை வேட்டையாடி செல்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றன. உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சிறுத்தைகள், நாய்கள், கோழிகள் உள்ளிட்ட வளா்ப்புப் பிராணிகளை வேட்டையாடிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.
குன்னூா், மவுண்ட் பிளசண்ட் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த சிறுத்தை அங்கு
குடியிருப்பு பகுதியில் இருந்த வளா்ப்பு நாயை வேட்டையாடிச் செல்லும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. கடந்த ஒருவார காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் குடியிருப்புகள் பகுதிகளில் அதிக அளவில் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இது தொடா்பாக வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.