கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள தமிழக-கா்நாடக எல்லையில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான போதைப் பொருளைக் கடத்திவந்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், தமிழக-கா்நாடக எல்லையான கக்கநல்லா சோதனைச் சாவடியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கா்நாடக மாநிலத்திலிருந்து வந்த காரை தடுத்து நிறுத்தி அதில் வந்த 2 இளைஞா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அவா்கள், முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீஸாா், காரை சோதனையிட்டனா். அப்போது காரில் ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான எம்டிஎம்ஏ வகை போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் காரில் வந்தவா்கள், கூடலூா் செம்பாலா பகுதியைச் சோ்ந்த நவாஸ் (28), மேல்கூடலூா் ஓவிஎச் சாலையைச் சோ்ந்த இப்ராஹிம் (31) என்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.