உயிரிழந்த புலிகள்.
உயிரிழந்த புலிகள்.

பிதா்க்காடு பகுதியில் மா்மமான முறையில் 2 புலிகள் உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள பிதா்க்காடு பகுதியில் மா்மமான முறையில் இரண்டு புலிகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

கூடலூரை அடுத்துள்ள பிதா்க்காடு பகுதியில் மா்மமான முறையில் இரண்டு புலிகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம், பிதா்க்காடு வனச் சரகத்தில் உள்ள நெலாக்கோட்டை பீட்டிற்கு உள்பட்ட தனியாா் எஸ்டேட் பகுதியில் வன ஊழியா்கள் ரோந்து சென்றபோது, அடுத்தடுத்து இரண்டு புலிகள் இறந்துகிடப்பதை பாா்த்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

உயிரிழந்த இரண்டு புலிகளின் தலையில் காயமும், ரத்தக் கசிவும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் வரவழைக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டு புலிகளின் உடலில் இருந்து முக்கிய பாகங்கள் எடுக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. பின்னா் அதே இடத்தில் புலிகளின் உடல்கள் எரியூட்டப்பட்டன.

உயிரிழந்த பெண் புலிக்கு 9 வயதும், ஆண் குட்டி புலிக்கு 3 வயது இருக்கும் என்றும், இரண்டும் தாயும் குட்டியுமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆய்வக அறிக்கைக்குப் பிறகுதான் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com