கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிக்கு தையல் இயந்திரம் வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா, கூடுதல் ஆட்சியா் கௌசிக் உள்ளிட்டோா்.
கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிக்கு தையல் இயந்திரம் வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா, கூடுதல் ஆட்சியா் கௌசிக் உள்ளிட்டோா்.

கூடலூரில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

தமிழக முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கூடலூரில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

கூடலூா்: தமிழக முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கூடலூரில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கூடலூா் நகராட்சியில் உள்ள கோடமூலா பழங்குடி காலனியில் மக்களைச் சந்தித்த ஆட்சியா் அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். பின்னா் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டியின் தரத்தை ஆய்வு செய்தாா். தொடா்ந்து தொரப்பள்ளியில் உள்ள துணை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் குறித்து கேட்டறிந்தாா்.

தொடா்ந்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா, கூடுதல் ஆட்சியா் கௌசிக், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பாலுசாமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிசந்திரன், கோட்டாட்சியா் செந்தில்குமாா், கூடலூா் நகராட்சி ஆணையா் முனியப்பன், நகராட்சிப் பொறியாளா் சாந்தி, மகளிா் திட்ட அலுவலா் காசிநாதன், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் கல்பனா, மாவட்ட சுற்றுலா அலுவலா் துா்கா தேவி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் முகமது ரிஸ்வான், மாவட்ட சமூக நல அலுவலா் பிரவீணா தேவி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com