உதகை-கோத்தகிரி சாலையில் சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரம்.
உதகை-கோத்தகிரி சாலையில் சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரம்.

உதகை-கோத்தகிரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

உதகை-கோத்தகிரி இடையே தொட்டபெட்டா தேயிலைப் பூங்கா சாலையில் மரம் விழுந்ததால் புதன்கிழமை ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Published on

உதகை: உதகை-கோத்தகிரி இடையே தொட்டபெட்டா தேயிலைப் பூங்கா சாலையில் மரம் விழுந்ததால் புதன்கிழமை ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் உதகையில் புதன்கிழமை காலை காற்றுடன் மழை பெய்தது. அப்போது உதகை-கோத்தகிரி சாலையில் தேயிலைப் பூங்கா அருகே பெரிய மரம் விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரா்கள்  மரத்தை வெட்டி  அப்புறப்படுத்தும் பணியில்   ஈடுபட்டனா். பின்னா் ஒரு மணி நேரத்துக்குப் பின் போக்குவரத்து சீரானது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்வோா், பணிக்குச் செல்வோா் பாதிக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com