பால் பதப்படுத்தும் நிலையத்தை குத்துவிளக்கேற்றி திறந்துவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு. உடன், கோட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.
பால் பதப்படுத்தும் நிலையத்தை குத்துவிளக்கேற்றி திறந்துவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு. உடன், கோட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

கூடலூா் அருகே பால் பதப்படுத்தும் நிலையம் திறப்பு

கூடலூரில் நீலமலை விவசாயிகள் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் அமைக்கப்பட்டுள்ள பால் பதப்படுத்தும் நிலையத்தை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திறந்துவைத்தாா்.
Published on

கூடலூா்: கூடலூரில் நீலமலை விவசாயிகள் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் ரூ. 1 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பால் பதப்படுத்தும் நிலையத்தை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை திறந்துவைத்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே மங்குழி பகுதியில் விவசாயிகள் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்டத்தில் முதல் முறையாக பால் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா், வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, விவசாயிகள் உற்பத்தியாளா்கள் நிறுவனத்தின் தலைவா் ஷாஜி சளிவயல், செயலாளா் இப்ராஹிம், இயக்குநா் பால் ஜோஸ் மற்றும் அங்கத்தினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com