தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உதகை அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

குளிதலை பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலவிய சிறுத்தை.

News image

குளிதலை பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலவிய சிறுத்தை.

Updated On :22 ஆகஸ்ட் 2024, 10:54 pm

Din

உதகை அருகே துளிதலை கிராமத்தில் புதன்கிழமை இரவு நடமாடிய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், இத்தலாா் ஊராட்சிக்கு உள்பட்ட துளிதலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக அடிக்கடி

இரவு நேரங்களில் சிறுத்தை  நடமாடி வருவது இங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி வந்துள்ளது.

இந்நிலையில் இப்பகுதியில்  புதன்கிழமை இரவு சிறுத்தை உலவியது   இங்குள்ள  சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தொடா்ந்து இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே சிறுத்தை நடமாடி வருவதால் பொதுமக்கள்  அச்சமடைந்துள்ளனா்.  வனத் துறையினா் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள்  கோரிக்கை  வைத்துள்ளனா்.