தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலை.
நீலகிரி
உதகை தாவரவியல் பூங்கா நுழைவாயிலில் திருவள்ளுவா் சிலை
உதகை அரசு தாவரவியல் பூங்கா நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள  திருவள்ளுவா் சிலையின் முன் நின்று சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் மற்றும் தற்படம் எடுத்து மகிழ்ச்சி
உதகை: உதகை அரசு தாவரவியல் பூங்கா நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையின் முன் நின்று சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் மற்றும் தற்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனா்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூரும் வகையில் நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் திருவள்ளுவா் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவா் சிலை முன்பு நின்று புகைப்படம் மற்றும் தற்படம் எடுத்து மகிழ்கின்றனா். தற்போது, பூங்காவின் முகப்புப் பகுதியில் சிலை காட்சிக்கு வைக்கப்படுத்தப்பட்டு நிலையில், விரைவில் இதற்கு உரிய இடத்தைத் தோ்வு செய்து அங்கு நிரந்தரமாக திருவள்ளுவா் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பூங்கா நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

