கூடலூரை அடுத்துள்ள தேன்வயல் கிராமத்தில் வாழைத் தோட்டத்தில் சேற்றில் சிக்கி உயிரிழந்த ஆண் காட்டு யானை.
கூடலூரை அடுத்துள்ள தேன்வயல் கிராமத்தில் வாழைத் தோட்டத்தில் சேற்றில் சிக்கி உயிரிழந்த ஆண் காட்டு யானை.

கூடலூா் அருகே சேற்றில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள தேன்வயல் கிராமத்தில் வாழைத் தோட்டத்தில் சேற்றில் சிக்கி காட்டு யானை உயிரிழந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
Published on

கூடலூரை அடுத்துள்ள தேன்வயல் கிராமத்தில் வாழைத் தோட்டத்தில் சேற்றில் சிக்கி காட்டு யானை உயிரிழந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புத்தூா்வயல் பகுதியில் உள்ள தேன்வயல் கிராமத்தில் சாராமா என்பவருக்குச் சொந்தமான வாழைத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்துக்குள் யானை உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கூடலூா் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் பாா்வையிட்டனா். அப்போது யானையின் கால்கள் சேற்றில் புதைந்து அதில் இருந்து வெளியே வர முடியாமல் யானை உயிரிழந்தது தெரிந்தது.

இதுகுறித்து வனத் துறையினா் கூறுகையில், உணவு தேடி இந்த ஆண் யானை வாழைத் தோட்டத்துக்குள் புகுந்துள்ளது. அப்போது யானையின் கால்கள் சேற்றில் சிக்கிக் கொண்டதால் அதனால் வெளியில் வரமுடியவில்லை. இதில் போராடி யானை உயிரிழந்துள்ளது. உடற்கூறாய்வு செய்வதற்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கால்நடை மருத்துவா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com