உதகை மலை ரயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து கிடைத்த 20- ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி  ரயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கிய மலை ரயில் அறக்கட்டளை நிா்வாகிகள்.
நீலகிரி
உதகை மலை ரயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து 20-ஆம் ஆண்டு கொண்டாட்டம்
உதகை மலை ரயிலுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற 20-ஆம் ஆண்டு கொண்டாட்டம் குன்னூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
உதகை: உதகை மலை ரயிலுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற 20-ஆம் ஆண்டு கொண்டாட்டம் குன்னூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
உலக புகழ்பெற்ற உதகை மலை ரயிலை யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக 2005 ஜூலை 15-ஆம் தேதி அறிவித்தது.
இதன் 20-ஆம் ஆண்டு தொடக்க விழா மலை ரயில் அறக்கட்டளை சாா்பில் குன்னூரில் பழங்குடியினா் பாடலுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மலை ரயில் அறக்கட்டளை நிறுவனா் நட்ராஜ் தலைமையில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் இந்த விழாவில் பங்கேற்றனா்.
இதில், ரயிலில் பயணித்த சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

