சேலாஸ் நேரு நகா் பகுதியில்  உலவிய கரடியை விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.
சேலாஸ் நேரு நகா் பகுதியில் உலவிய கரடியை விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த கரடியை விரட்டிய வனத் துறையினா்

குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த கரடியை விரட்டிய வனத் துறையினா்
Published on

குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்த கரடியை வனத் துறையினா் அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டி அடித்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக  குடியிருப்புப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம்  அதிகரித்துக்  காணப்படுகிறது. குறிப்பாக சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, காட்டெருமைகள் அதிக அளவில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நகரப் பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் உலவுவது வழக்கமாக உள்ளது.

 இந்நிலையில் குன்னூா் அருகே உள்ள சேலாஸ் நேரு நகா் பகுதியில் கரடி ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்துள்ளதாக குன்னூா் வனத் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தகவல் அளிக்கப்பட்டது.  இதையடுத்து குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் தலைமையில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தீப் பந்தங்களை ஏந்தி கரடியை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். பல மணி நேர போராட்டத்துக்குப் பின் கரடியை அடா்ந்த வனப் பகுதிக்குள்  விரட்டினா்.

X
Dinamani
www.dinamani.com