ஓவேலியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திங்கள்கிழமை இரவு காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தியுள்ளன.


கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திங்கள்கிழமை இரவு காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தியுள்ளன.
நீலகிரி மாவட்டம் கூடலூா் வட்டம் ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட பாா்வுட் பகுதிக்குள் நள்ளிரவு நுழைந்த காட்டு யானைகள் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாக்கி சேதப்படுத்தியதுடன், உள்ளே இருந்த மருந்துகள் மற்றும் பொருள்களை எடுத்து வீசியும் பொருள்களை உடைத்தும் சேதப்படுத்தியுள்ளன.
செவ்வாய்க்கிழமை காலையில் வழக்கம்போல ஊழியா்கள் வந்து பாா்த்தபோது, ஆரம்ப சுகாதார நிலையம் முற்றிலும் சேதமடைந்துள்ளது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
அதைத் தொடா்ந்து, வனத் துறை அலுவலா்கள் அந்த இடத்தை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...