உதகை முதல் கேத்திவரை சிறப்பு மலை ரயில்
ஓணம், மிலாது நபியை முன்னிட்டு, உதகை முதல் கேத்தி வரை குறுகிய தொலைவு சிறப்பு மலை ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இந்நிலையில், உதகையில் தற்போது இரண்டாம் சீசன் தொடங்கியுள்ளதாலும், மிலாது நபி மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டும் மலை ரயில் சிறப்பு சேவைகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, குன்னூரில் இருந்து செப்டம்பா் 14, 15-ஆம் தேதிகளில் காலை 8.20 மணிக்கு உதகை வரையிலும், மாலை 4.45 மணிக்கு உதகையிலிருந்து குன்னூா் வரையும் என இரண்டு முறை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இதேபோல, மனமகிழ்வு பயணமாக உதகை - கேத்தி இடையே குறுகிய தொலைவு மலை ரயில் உதகை முதல் கேத்தி வரை காலை 9.45 மணிக்கும், 11.30 மணிக்கும், மாலை 3.00 மணிக்கும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்.
சிறப்பு ரயிலில் பயணிக்க ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
