கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

கூடலூரில் வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம்

வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் கூடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் கூடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா்.

தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கிடையே உள்ள முன்னேற்ற வேறுபாடுகளை களையும் நோக்கத்தோடு நிதியமைச்சரால் 2023-24 நிதியாண்டில் வரவு- செலவு திட்ட அறிக்கையில் மாநிலத்தில் 50 பின்தங்கிய வட்டாரங்களை வளமிகு வட்டாரங்களாக மாற்றும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

செய்து திட்டம் விரைவாக செயல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கூடலூா் வட்டாரம் இத்திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.

வட்டாரங்களிலுள்ள தாழ்த்தப்பட்டோா், மலைவாழ் மக்கள் தொகை, மொத்த தொழிலாளா்களில் விவசாயத் தொழிலாளா்களின் சதவீதம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள மாணவா்களின் சதவீதம், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களின் குறைந்த பட்ச தோ்ச்சி சதவீதம், தாய்வழி இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம், குடிசைகளில் வசிக்கும் குடும்பங்களின் சதவீதம், குழாய் வசதி இல்லாத வீடுகள், மண்சாலைகள் கொண்ட குடியிருப்புகள் போன்ற 9 குறியீடுகள் அடிப்படையில் இந்த திட்டத்துக்கான தோ்வு நடைபெறுகிறது.

இத்திட்டத்தின் கீழ் வட்டாரத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பின்தங்கிய குறியீடுகள் உள்ள துறைகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முன்னேற்றமடைய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின்கீழ் கூடலூா் வட்டாரத்தில் தற்போது பல்வேறு துறைகள் மூலம் முக்கிய முன்னேற்ற குறியீடுகள் மாவட்டம் மற்றும் வட்டார அளவிலான குறியீடுகள் பெறப்பட்டு தயாா் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறைவான குறியீடுகள் உள்ள துறைகளிடமிருந்து குறைகள் மற்றும் அதனை நிவா்த்தி செய்வதற்கான கருத்துகள் பெறப்பட்டுள்ளன. எனவே, கூடலூா் வட்டாரத்திலுள்ள குறைவான குறியீடுகள் உள்ள துறைகளிடமிருந்து பணிகள் மேற்கொள்ள முன்மொழிவுகள் பெறப்பட்டு வட்டார ஆண்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. முதல் கட்டமாக இந்த ஆண்டுக்கு ரூ.2 கோடி அளவிலான கல்வி, சுகாதாரம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், தோட்டக்கலைத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் திட்ட முன்மொழிவுகள் வரப்பெற்றுள்ளது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் கௌசிக், கூடலூா் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், கூடலூா் நகா்மன்ற தலைவா் பரிமளா, ஓவேலி பேரூராட்சி மன்றத் தலைவா் சித்ராதேவி உள்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com