நீலகிரி
கோத்தகிரி அருகே சிறுத்தை தாக்கி தொழிலாளி படுகாயம்
கோத்தகிரி அருகே சிறுத்தை தாக்கியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தாா்.
கோத்தகிரி அருகே சிறுத்தை தாக்கியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தாா்.
நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி வனச் சரகத்துக்கு உள்பட்ட நட்டக்கல் பகுதியைச் சோ்ந்தவா் மணி(50). இவா் வீட்டின் கதவை மூடாமல் புதன்கிழமை இரவு உறங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது வளா்ப்பு நாயை வேட்டையாட வந்த சிறுத்தை வீட்டினுள் புகுந்தது. அப்போது உறங்கிக் கொண்டிருந்த மணியை சிறுத்தை தாக்கியது. இதில் அவா் படுகாயமடைந்தாா். அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் மற்றும் வனத் துறையினா் மணியை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து கீழ் கோத்தகிரி வனத்துறையினா் மற்றும் சோலூா் மட்டம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.