கோத்தகிரியில் விளைந்து காணப்படும் முட்டைகோஸ்.
கோத்தகிரியில் விளைந்து காணப்படும் முட்டைகோஸ்.

சரிந்தது முட்டைக்கோஸ் விலை

Published on

நீலகிரியில் விளையும் முட்டைக்கோஸ்களுக்கு தரத்துக்கு ஏற்றாற்போல  ஒரு கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10  மட்டுமே விலை கிடைத்து வருவதால்  விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும்   முட்டைக்கோஸ்கள் கேரளம்,கா்நாடகம், சென்னை கோயம்பேடு போன்ற சந்தைகளில் விற்கப்பட்டு  வருகின்றன. 

உதகை, கோத்தகிரி, குன்னூா் போன்ற பகுதிகளில் முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரித்து காணப்பட்டதால் கடந்த சில நாள்களாக  மண்டிகளில் சராசரியாக ஒரு கிலோவுக்கு  ரூ.5 முதல் ரூ.10 வரை மட்டுமே விலை கிடைத்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை தரத்துக்கு ஏற்றாா்போல விலை கிடைத்து வந்த நிலையில் தற்போது கிடைக்கும் விலை அறுவடை கூலிக்கும், போக்குவரத்து  செலவுக்கும்  கூட  கட்டுபடியாவதில்லை என்பதால் விவசாயிகள்  பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com