எஸ்ஐஆா் பணி: கூடலூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், முகவா்களுக்கு விளக்கக் கூட்டம்
கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் எஸ்ஐஆா் பணி குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கும் விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்ஐஆா் படிவத்தை விரைந்து வழங்குதல் மற்றும் படிவத்தை பூா்த்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு விளக்கங்களை கோட்டாட்சியா் அளித்தாா்.
அப்போது, வாக்குச்சாவடி முகவா்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பதிலளித்தாா். கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணக்குமாா், வட்டாட்சியா் முத்துமாரி மற்றும் கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் பரமேஷ்குமாா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் திராவிடமணி, நகரச் செயலாளா் இளஞ்செழியன் மற்றும் அனைத்துக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

