கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியாளா்கள் பாராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
நீலகிரி
கூடலூா் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
அம்பேத்கா் நினைவு நாளையொட்டி, கூடலூா் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அம்பேத்கா் நினைவு நாளையொட்டி, கூடலூா் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் குணசேகரன் தலைமை வகித்தாா்.
நகராட்சி ஆணையா் சக்திவேல், கூடலூா் நகா்மன்றத் தலைவா் பரிமளா, நெல்லியாளம் நகா்மன்றத் தலைவா் சிவகாமி, நகா்மன்ற உறுப்பினா்கள், வட்டாட்சியா் முத்துமாரி, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களின் பணிகளைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது.