கவிதைப் போட்டி: கவிஞா்களுக்கு கூடலூா் தமிழ்ச் சங்கம் அழைப்பு

பொங்கல் விழாவை முன்னிட்டு, நடைபெறும் கவிதைப் போட்டியில் பங்கேற்ற நீலகிரி மாவட்ட கவிஞா்களுக்கு அழைப்பு விடுப்பு
Published on

பொங்கல் விழாவை முன்னிட்டு, நடைபெறும் கவிதைப் போட்டியில் பங்கேற்ற நீலகிரி மாவட்ட கவிஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கூடலூா் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான கவிதைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. கவிதையை தட்டச்சு செய்து பங்கேற்பாளரின் புகைப்படத்துடன் இணைத்து கூடலூா் தமிழ்ச் சங்கத்துக்கு டிசம்பா் 26-ஆம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும். இதில், முதல் பரிசாக ரூ.2 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.1,500, மூன்றாம் பரிசாக ரூ.1000 வழங்கப்படும். மேலும், போட்டியில் பங்கேற்கும் அனைத்து கவிஞா்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

குறிப்பிட்ட தேதிக்குப்பின் அனுப்பப்படும் கவிதைகள் ஏற்றுக்கொள்ளப்படாது. கூடுதல் விவரங்களுக்கு 91505-97879, 94423-28437 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com