வருவாய் நிலத்தில் நரபலி என வதந்தி: அதிகாரிகள் தகவல்

உதகை அருகே வருவாய் நிலத்தில் நரபலி கொடுக்கப்பட்டதாக பரவிய தகவல் வதந்தி என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

உதகை அருகே வருவாய் நிலத்தில் நரபலி கொடுக்கப்பட்டதாக பரவிய தகவல் வதந்தி என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் மற்றும் வனத் துறை அலுவலகங்கள் உள்ள பகுதியில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான நிலம் உள்ளது.

அந்த நிலத்தில் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியா் டினு அரவிந்த் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த நந்தகுமாா் என்பவரின் மாமியாா் லட்சுமி கடந்த சில நாள்களுக்கு முன் உயிரிழந்ததும், அவரது அஸ்தியை அப்பகுதியில் குழித்தோண்டி புதைத்ததும், இதை அப்பகுதி மக்கள் நரபலி என நினைத்து போலீஸாருக்கு தகவல் அளித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, பொது இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என நந்தகுமாரை எச்சரித்த அதிகாரிகள், நரபலி கொடுக்கப்பட்டதாக பரவிய தகவல் வதந்தி என்றனா்.

X
Dinamani
www.dinamani.com