காப்புக் காட்டில் மண் அள்ளியதாக 7 போ் கைது
உதகை வடக்கு வனச் சரகத்துக்கு உள்பட்ட முத்தினாடு காப்புக் காட்டுப் பகுதியில் உள்ள பழைய ஹெச்பிஎப் நிறுவனத்துக்குள் அத்துமீறி நுழைந்து மண் மற்றும் கற்களை வாகனத்தில் எடுத்து செல்ல முயன்ற 7 பேரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
உதகை வடக்கு வனச் சரகம், முத்தினாடு காப்புக் காட்டுப் பகுதியில் உள்ள பழைய ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை தற்போது வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு வெள்ளித் துகள்கள் கலந்த மண் இருப்பதால் இதனை அவ்வப்போது சிலா் அள்ளிச் சென்று விற்று வருகின்றனா்.
இந்நிலையில் இப்பகுதிக்குள் வியாழக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து மண் மற்றும் கற்களை உடைத்து எடுத்து செல்ல முயன்ாக உதகை தலைகுந்தா பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (38),
அப்பாஸ்(39), அருண் (30), பஷீா்(38), சீனி(28), சிவகுமாா் (34), உதகை கடநாடு பகுதியைச் சோ்ந்த மணி (29) ஆகியோரை வனத் துறையினா் கைது செய்தனா். பின்னா் அவா்களை உதகை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
