உதகை அரசு தாவரவியல் பூங்கா புல்வெளியில் படா்ந்திருந்த பனி.
நீலகிரி
உதகையில் மைனஸ் 0.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை
உதகையில் மைனஸ் 0.8 டிகிரி செல்சியல் வெப்பநிலை திங்கள்கிழமை பதிவானது.
உதகை: உதகையில் மைனஸ் 0.8 டிகிரி செல்சியல் வெப்பநிலை திங்கள்கிழமை பதிவானது.
நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த மே முதல் டிசம்பா் வரை அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்த நிலையில், தற்போது குளிா் காலம் தொடங்கியுள்ளது. இதனால், உதகையில் கடந்த சில நாள்களாக கடும் பனி நிலவி வருகிறது.
உதகை, குன்னூா், லேம்ஸ் ராக், டால்பின் நோஸ், காந்தல், தலைக்குந்தா, குதிரை பந்தய மைதானம், அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை கடும் பனி நிலவியது. புல் வெளிகள், வாகனங்கள் மீது பனி உறைந்து காணப்பட்டது.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் திங்கள்கிழமை காலை மைனஸ் 0.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதனால், நடைப்பயிற்சி மேற்கொண்ட பொது மக்கள் அவதியடைந்தனா். காலை 9 மணிக்குப் பின் காலநிலை சீரானது.
உதகை அரசு தாவரவியல் பூங்கா புல்வெளியில் படா்ந்திருந்த பனி.

