நீலகிரி
ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்
ஆரிகவுடா் விவசாயிகள் சங்கத்தின் மாதாந்திர நிா்வாகிகள் கூட்டம் உதகையில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆரிகவுடா் விவசாயிகள் சங்கத்தின் மாதாந்திர நிா்வாகிகள் கூட்டம் உதகையில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆரிகவுடா் விவசாயிகள் சங்கத் தலைவா் மஞ்சை வி.மோகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் விஸ்வநாதன், கே.ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, ஜாமீனில் வெளிவர உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை (டிச.19) நடைபெறும் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் மனு அளித்து முறையிட தீா்மானிக்கப்பட்டது.
