உதகையை அடுத்த தலைகுந்தா பகுதியில் இருந்து  ஹெச்பிஎஃப் செல்லும் சாலையில் குவிந்த சுற்றுலா வாகனங்கள்.
உதகையை அடுத்த தலைகுந்தா பகுதியில் இருந்து ஹெச்பிஎஃப் செல்லும் சாலையில் குவிந்த சுற்றுலா வாகனங்கள்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை: உதகை - மேட்டுப்பாளையம் இடையே ஜன.5 வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வரும் 5-ஆம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வரும் 5-ஆம் தேதி வரை நீலகிரி  மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை  அதிகரித்து வருகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்ட காவல்துறை சாா்பில் டிச.25 முதல் ஜன.5 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி  மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின்  வாகனங்கள் குன்னூா் வழியாகவும்,  உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும் அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும்  அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு வரும் வாகனங்கள், உள்ளூா் வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

மேலும்  கூடலூா் வழியாக  உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள்  ஹெச்பிஎஃப் பகுதியில் நிறுத்தப்பட்டு, அரசு சுற்றுப்பேருந்துகள் மூலமாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டும். குன்னூா் வழியாக உதகைக்கு வரும் சுற்றுலா வாகனகள் உதகை ஆவின் பகுதியில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து அரசு சுற்றுப்பேருந்துகளில் செல்ல வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com