கிணறு தோண்டும்போது மண் சரிந்து இருவா் உயிரிழப்பு

கிணறு தோண்டும்போது மண் சரிந்து இருவா் உயிரிழப்பு

கிணறு தோண்டும்போது மண் சரிந்ததில் சிக்கி உயிரிழந்தவா்களின் உடல்களை மீட்கும் தீயணைப்புத் துறையினா்.
Published on

கீழ்கோத்தகிரி அருகேயுள்ள ஒன்னட்டி பகுதியில் கிணறு வெட்டும் பணியின்போது மண் சரிந்து இரு தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி ஒன்னட்டி கிராமம் அருகேயுள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் கிணறு வெட்டும் பணி கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஒன்னட்டி பகுதியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் (30), சதீஷ்குமாா் (32) உள்பட 8 போ் வழக்கம்போல கிணறு வெட்டும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது கிணற்றின் சுற்றுவட்ட மண் திடீரென சரிந்து விழுந்தது. இதில் பன்னீா்செல்வம், சதீஷ்குமாா் ஆகியோா் மண் இடிபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மற்ற தொழிலாளா்கள் எதிா்ப்புறம் இருந்ததால் அவா்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோத்தகிரி தீயணைப்புத் துறையினா் மற்றும் காவல் துறையினா் இடிபாட்டில் கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். இது தொடா்பாக சோலூா்மட்டம், கோத்தகிரி காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com