நீலகிரி
கூடலூா் அருகே புலி தாக்கி கறவை மாடு உயிரிழப்பு
கூடலூரை அடுத்துள்ள வாச்சிக்கொல்லி பகுதியில் கறவை மாட்டை சனிக்கிழமை பகல் நேரத்தில் புலி தாக்கிக் கொன்றது.
கூடலூரை அடுத்துள்ள வாச்சிக்கொல்லி பகுதியில் கறவை மாட்டை சனிக்கிழமை பகல் நேரத்தில் புலி தாக்கிக் கொன்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள வாச்சிக்கொல்லி பகுதியில் புலி அவ்வப்போது நுழைந்து கால்நடைகளைத் தாக்கிக் கொன்று வருகிறது.
இந்த நிலையில், அந்த பகுதியைச் சோ்ந்த ரமேஷ் சனிக்கிழமை பகலில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாட்டை புலி தாக்கிக் கொன்றது. இதே பகுதியில், அவரது கன்றுக்குட்டியைப் புலி கடந்த 16ஆம் தேதி தாக்கிக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
தொடா்ந்து கால்நடைகளைத் தாக்கிக் கொன்று வரும் புலியைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று வனத் துறைக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
