புத்தாண்டு கொண்டாட்டம்: வனத் துறை அறிவுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வனப் பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கும் சுற்றுலாப் பயணிகள் அதிக ஒலியுடன் கூடிய பட்டாசு வெடிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை வனத் துறையினா் விடுதி உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தல்
Published on

நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வனப் பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கும் சுற்றுலாப் பயணிகள் அதிக ஒலியுடன் கூடிய பட்டாசு வெடிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை வனத் துறையினா் விடுதி உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தியுள்ளனா்.

நீலகிரி மாவட்டம் சுமாா் 60 சதவீதம் வனப் பகுதியை கொண்ட மாவட்ட மாகும். இங்குள்ள பெரும்பாலான சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் வனப் பகுதியை ஒட்டியே அமைந்துள்ளன. நீலகிரியில் உள்ள காலநிலையில் புத்தாண்டை கொண்டாட தமிழகம் மட்டுமில்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்து தங்கும் விடுதிகள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவா்.

பெரும்பாலும் இரவு நேரங்களில் விடுதிகளில் பட்டாசு வெடித்தல், அதிக சப்தத்துடன் கூடிய ஆடல்,பாடல் நிகழ்க்சிகள் நடத்துதல், கேம் பயா் (தீ மூட்டி) அதைச் சுற்றி நடனமாடுதல், இரவு நேரத்தில் வாகனங்களில் வனப் பகுதி சாலைகளில் வலம் வருதல் உள்ளிட்ட கேளிக்கைகளில் ஈடுபடுவா். மேலும் ட்ரோன் மூலம் வனப் பகுதியில் விடியோ எடுப்பதும் வழக்கம்,

இதைத் தடுக்கும் வகையில் வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும் விடுதிகளில் தங்குபவா்களிடம் விடுதி உரிமையாளா்கள் அல்லது மேலாளா்கள் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடாமல் இருக்க பாா்த்துக் கொள்ள வேண்டும் என்று வனத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com