உதகை லவ்டேல் மலை ரயில் தண்டவாளத்தில் உலவிய கரடி.
நீலகிரி
ரயில் தண்டவாளத்தில் உலவிய கரடி
உதகை மலை ரயில் தண்டவாளத்தில் உலவிய கரடியை சுற்றுலாப் பயணிகள் கண்டு புகைப்படம் எடுத்தனா்.
உதகை மலை ரயில் தண்டவாளத்தில் உலவிய கரடியை சுற்றுலாப் பயணிகள் கண்டு புகைப்படம் எடுத்தனா்.
நீலகிரி மாவட்ட வனப் பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் நடமாடுவது சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், உதகை லவ்டேல் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கரடி புதன்கிழமை உலவியது. இதைக் கண்ட மலை ரயிலில் வந்த சுற்றுலாப் பயணிகள், கரடியை தங்களது கைப்பேசிகளில் புகைப்படம் எடுத்தனா்.
மலை ரயில் பயணத்தின்போது, சுற்றுலாப் பயணிகள் தின்பண்டங்களை தண்டவாளத்தில் வீசி செல்வதால், அவற்றை உண்பதற்காக கரடிகள் வந்து செல்வது வாடிக்கையாகி விட்டதாக ரயில்வே பணியாளா்கள் தெரிவித்தனா்.

