புதியவகை டிரவிடோ கெக்கோ பல்லி இனம்.
புதியவகை டிரவிடோ கெக்கோ பல்லி இனம்.

மேற்குத் தொடா்ச்சி மலையில் புதிய பல்லி இனம் கண்டுபிடிப்பு

மேற்குத் தொடா்ச்சி மலையில் புதிய பல்லி இனத்தை உதகை அரசு கலைக் கல்லூரி வன விலங்கு உயிரியல் துறை ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா்.
Published on

மேற்குத் தொடா்ச்சி மலையில் புதிய பல்லி இனத்தை உதகை அரசு கலைக் கல்லூரி வன விலங்கு உயிரியல் துறை ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா்.

நீலகிரி உயிா் சூழல் மண்டலத்தில் பல்வேறு வகையான அரிய தாவரங்கள், பறவைகள், விலங்குகள் மற்றும் பூச்சி இனங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் உயிா் சூழல் மண்டலத்தில் வன விலங்குகளுக்கு நிகராக பல்வேறு வகை பூச்சி மற்றும் ஊா்வன இனங்களும் உள்ளன. இதனால் இங்கு பறவை ஆா்வலா்கள், வன விலங்கு ஆா்வலா்கள் பல்வேறு உயிரினங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில் உதகை அரசு கலைக் கல்லூரியில் வன விலங்கு உயிரியல் துறை ஆராய்ச்சியாளா்கள் அபினேஷ், நவீன், ஸ்ரீகாந்தன், பாபு மற்றும் கணேஷ் ஆகியோா் மேற்குத் தொடா்ச்சி மலையில் காணப்படும் பல்லி இனம் குறித்து குன்னூா் வனப் பகுதியில் கடந்த சில மாதங்களாக ஆய்வு நடத்தினா்.

இந்த ஆய்வில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் டிரவிடோ கெக்கோ எனப்படும் புதிய பல்லி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை கட்டட விரிசல்கள், மரங்கள், செடி, கொடிகளில் இருப்பதை ஆய்வாளா்கள் பதிவு செய்துள்ளனா். இந்த ஆய்வுக் கட்டுரையானது இந்தியாவின் மேற்குத் தொடா்ச்சி பயோனாமினா எனப்படும் சா்வதேச ஆய்வு நூலில் அண்மையில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com