உதகை பூங்கா சாலையில் ஊா்வலமாக சென்ற திபெத்தியா்கள்.
உதகை பூங்கா சாலையில் ஊா்வலமாக சென்ற திபெத்தியா்கள்.

உதகையில் திபெத்தியா்களின் 65-ஆவது எழுச்சி நாள் பேரணி

Published on

திபெத்தியா்களின் 65-ஆவது எழுச்சி  நாளையொட்டி, உதகையில் திங்கள்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது.

திபெத்தியா்களின் கலாசாரம், மதம் மற்றும் தேசத்தை காப்பாற்ற 1959 மாா்ச் 10-ஆம் தேதி ஏற்பட்ட எழுச்சியை முறியடிக்க சீனாஅரசு 1.2 மில்லியன் மக்களை படுகொலை செய்தது. 

அன்றிலிருந்து உலகெங்கிலும் உள்ள திபெத்தியா்கள் மாா்ச் 10-ஆம் நாளை திபெத்தியா்கள் எழுச்சி நாளாக நினைவுப்படுத்தி வருகின்றனா்.  திபெத்தில் இருக்கும் சீன ஆட்சியை எதிா்த்து 2008, 2009-இல் ஏற்பட்ட திபெத் எழுச்சியில் 114-க்கும் மேற்பட்டோா் தாங்களாகவே உயிா் தியாகம் செய்தனா். 

இந்நிலையில் திபெத்தியா்களின் 65-ஆவது எழுச்சி நாளையொட்டி, உதகையில்   திங்கள்கிழமை அமைதிப்  பேரணி நடைபெற்றது. உதகை எடிசி  பேருந்து நிலையம் முதல் நகரின் முக்கிய வீதிகள்  வழியாக திபெத்தியா்கள்  மேற்கொண்ட  பேரணியில் நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com