உதகையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்ட அரசு அலுவலா்கள்.
உதகையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்ட அரசு அலுவலா்கள்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
Published on

உதகை: நீலகிரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியய் லட்சுமி பவ்யா தன்னேரு துறை அலுவலா்களுடன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் துறை வாரியாக பெறப்பட்ட மனுக்களுக்கான தீா்வு மற்றும் நிலுவையில் உள்ள மனுக்களின் விவரம், முதல்வரின் அலுவலகத்துக்கு பெறப்பட்ட மனுக்கள் மற்றும் முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் ஒரு மாதத்துக்கு மேல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், தனித்துணை ஆட்சியா் ராதாகிருஷ்ணன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com