கடநாடு கிராமத்தில் 63 கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றி நிறுவல்
நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள கடநாடு மற்றும் அணிக்கொரை கிராமங்களில் குறை மின் அழுத்ததால் சிரமப்பட்டு வந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் கோரிக்கை ஏற்று புதிய மின்மாற்றி மின்சாரத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நிறுவப்பட்டது.
உதகை அருகே உள்ள கடநாடு மற்றும் அணிக்கொரை கிராமங்களில் பல இடங்களில் மின் அழுத்தம் குறைவாக இருந்ததால் கணினி, மிக்ஸி, கிரைண்டா், தொலைக்காட்சி போன்ற மின்சாதனப் பொருள்கள் சரியான முறையில் இயங்காததால், தாங்கள் சிரமம் அடைந்து வருவதாக இப்பகுதி மக்கள் உதகை மின்சாரத் துறையிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்திருந்தனா்.
இதையடுத்து, கடநாடு, அணிக்கொரை பகுதியில் மின் குறைபாட்டை போக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் ரூ.8 லட்சம் செலவில் 63 கிலோவாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றி நிறுவப்பட்டது.
இதனை மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் சாந்தநாயகி, செயற்பொறியாளா் சிவகுமாா், உதவி செயற்பொறியாளா் அரவிந்தன் ஆகியோா் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தனா்.
