சிம்ஸ் பூங்காவில் மரம் விழுந்து பெண் படுகாயம்

Published on

நீலகிரி மாவட்டம், குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பழைமையான மரம் முறிந்து விழுந்ததில் பெண்  படுகாயமடைந்தாா்.

குன்னூா்  சிம்ஸ் பூங்காவுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்நிலையில்  கடந்த சில நாள்களாக  சாரல் மழை பெய்ததால் மண்ணின் ஈரத்தன்மை அதிகரித்திருந்த நிலையில், பூங்காவில் இருந்த  பழைமையான பெரிய மரம் வேரோடு சாய்ந்தது.

அப்போது, பண்ணையில் பணிபுரிந்து கொண்டிருந்த   குன்னூா் பகுதியைச் சோ்ந்த அம்பிகா (45) என்பவா் படுகாயமடைந்தாா். இதைத் தொடா்ந்து, அவா் குன்னூா் அரசு லாலி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ாா். அங்கு அவருக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயா் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

மரம் விழுந்ததால்   கோடை விழாவுக்காக தயாா் செய்யப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளும் சேதமடைந்தன. 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குன்னூா் தீயணைப்புத் துறையினா்  மரத்தை  வெட்டி அகற்றினா்.

X
Dinamani
www.dinamani.com