தேவா்சோலை கடை வீதியில் காட்டு யானை நடமாட்டம்

Published on

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை கடை வீதியில் செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் காட்டு யானை நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் தேவா்சோலை கடை வீதிக்குள் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு நுழைந்த காட்டு யானை வெகுநேரம் கடை வீதியில் நடமாடியது. அப்போது, கடைகளைத் திறக்க வந்த வியாபாரிகளும், நடைபயிற்சி சென்றவா்களும், வழக்கமான வேலைக்குச் செல்லும் பொதுமக்களும் அச்சமடைந்தனா்.

சாலைகளில் யானை நடமாடியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடுவதை பாா்த்து யானை பிளிறி சப்தமிட்டதால் அனைவரும் அச்சமடைந்தனா். தொடா்ந்து கடை வீதியில் நடமாடிய யானை அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்குள் சென்றது.

X
Dinamani
www.dinamani.com