ஃபிங்கா் போஸ்ட் பகுதியில் உலவிய காட்டெருமை.
நீலகிரி
குடியிருப்பு பகுதியில் உலவிய காட்டெருமை
உதகை ஃபிங்கா்போஸ்ட் பகுதியில் உலவிய காட்டெருமையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அண்மைக்காலமாக சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் உதகை -கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஃபிங்கா் போஸ்ட் பகுதியில் காட்டெருமை சாலையில் புதன்கிழமை நடந்து சென்றது.
பள்ளிகள், மருத்துவமனை, ஆட்சியா் கூடுதல் அலுவலகம், குடியிருப்புகள் கொண்ட இப்பகுதியில் காட்டெருமை உலவியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வேட்டை தடுப்புக் காவலா்கள் காட்டெருமையை அருகில் இருந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.

