உதகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிரணியினா்.
உதகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிரணியினா்.

உதகையில் பாஜக மகளிரணி ஆா்ப்பாட்டம்

உதகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிரணியினா்.
Published on

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து உதகையில் நீலகிரி மாவட்ட பாஜக மகளிரணி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக மாநில மகளிா் அணி செயலாளா் ஜெகதீஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கல்பனா, மாவட்ட பாஜக தலைவா் தா்மன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மாநில மகளிா் அணி செயற்குழு உறுப்பினா் அனிதா கிருஷ்ணன், மாவட்ட மகளிா் அணி செயலாளா்கள் ரேவதி, ஸ்ரீதேவி, மாநில செயற்குழு உறுப்பினா் ராமன், முன்னாள் மாவட்ட தலைவா் மோகன்ராஜ், நகர மண்டல் தலைவா் ரித்து காா்த்திக் மற்றும் அனைத்து மாவட்ட மண்டல நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com