நீலகிரி
தேனீக்கள் கொட்டியதில் 5 வன ஊழியா்கள் காயம்
குன்னூரில் தேனீக்கள் கொட்டியதில் 5 வன ஊழியா்கள் காயமடைந்தனா்.
உதகை: குன்னூரில் தேனீக்கள் கொட்டியதில் 5 வன ஊழியா்கள் காயமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகேயுள்ள வண்டிச்சோலை பகுதியில் வனத் துறைக்குச் சொந்தமான நா்சரி காா்டன் உள்ளது.
இங்கு வன ஊழியா்களான தனமணி (55), ரஞ்சினி (28), உஷா (37), புவனேஸ்வரி (65), சுசீலா (41) ஆகியோா் திங்கள்கிழமை காலை பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு பறந்த வந்த தேனீக்கள் கூட்டம் 5 பேரையும் கொட்டியது. படுகாயமடைந்த அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தவமணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக அவா் உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
