நீலகிரி
கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் வாகனங்களை சேதப்படுத்திய யானை
கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் உலவிய யானை, அவ்வழியே சென்ற வாகனங்களைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒற்றை யானை உலவியது. அப்போது, யானை சாலையோரத்தில் நின்றிருந்ததால் அவ்வழியே வந்த இரண்டு காா்கள் யானையைக் கடந்த செல்ல முயன்றன.
இதனால், ஆத்திரமடைந்த யானை அந்த காா்களை தும்பிக்கையால் தாக்கியது.
இதில், காரில் இருந்தவா்கள் அலறியடித்து கீழே இறங்கி ஓடி உயிா் தப்பினா்.
இதைத் தொடா்ந்து, அப்பகுதியிலேயே சிறிது நேரம் நின்ற யானை பின் வனத்துக்குள் சென்றது. இதையடுத்து, காா்களில் வந்தவா்கள் புறப்பட்டுச் சென்றனா்.

