பராமரிப்புப் பணி: பைக்காரா அருவி மூடல்
உதகை பைக்காரா அருவி பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு திங்கள்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக நீலகிரி வனக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டம், உதகை பைக்காரா அருவி பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அருவி திங்கள்கிழமை (நவம்பா் 17) முதல் மூடப்படுகிறது. பணிகள் முடிவடைந்ததும் பைக்காரா அருவிக்குச் செல்ல அனுமதியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் சுற்றுலாத் தலங்களுக்கு வாகனங்கள் செல்ல தடை: உதகை லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நடந்து சென்று சுற்றுலாத் தலங்களைக் காணலாம் என்று நகராட்சி ஆணையா் மற்றும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

