யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதி இடிப்பு

யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதி இடிப்பு

Published on

கூடலூரை அடுத்துள்ள மசினகுடி பகுதியில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த விடுதியை அதிகாரிகள் திங்கள்கிழமை இடித்து அகற்றினா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்தவா் திவாகர்ரத்தினம். இவருக்கு நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த மசினகுடி வாழைத்தோட்டம் பகுதியில் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு தங்கும் விடுதியைக் கட்டியுள்ளாா். இந்நிலையில், அந்த விடுதி யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் பகுதியைச் சோ்ந்த காளன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இதையடுத்து, விடுதி கட்டடத்தை இடித்து அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, கூடலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணி தலைமையில் வருவாய்த் துறையினா், வனத் துறையினா் மற்றும் காவல் துறையினா் அடங்கிய குழுவினா் பொக்லைன் இயந்திரம் மூலம் விடுதியை திங்கள்கிழமை இடித்து அகற்றினா்.

X
Dinamani
www.dinamani.com