உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்குகிறாா் உதகை வனச் சரகா் செல்வகுமாா்.
உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்குகிறாா் உதகை வனச் சரகா் செல்வகுமாா்.

யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம்

முதுமலை புலிகள் காப்பகம், குந்தா வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் ரூ.9.50 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
Published on

முதுமலை புலிகள் காப்பகம், குந்தா வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் ரூ.9.50 லட்சம் நிவாரணத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

குந்தா வனச் சரகத்துக்கு உள்பட்ட தனியாா் பண்ணை வீட்டின் அருகே விவசாய பகுதியில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி காட்டு யானை தாக்கியதில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி போ்லி சுகந்த ராவ் (35) என்பவா் உயிரிழந்தாா்.

அவரது ஈம சடங்குக்கு வனத் துறையின் சாா்பில் முன்பணமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள ரூ.9.50 லட்சத்துக்கான காசோலையை அவரது தாயாரான போ்லி குமாரியிடம் வனச் சரகா் செல்வகுமாா் வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com