கூடலூா் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பல்நோக்கி ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

கூடலூரில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பல்நோக்கு ஆய்வகம் அமைக்க வேண்டும் என்று ஓவேலி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
Updated on

கூடலூரில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பல்நோக்கு ஆய்வகம் அமைக்க வேண்டும் என்று ஓவேலி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி மலைப் பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ளதால் போதுமான வசதிகள் இல்லை. தற்போது, கூடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த பல்நோக்கு ஆய்வகம் குன்னூருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குன்னூா் பகுதி எளிதாக பெரிய நகரங்களை இணைக்கும் பகுதியாகும். உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சில மணி நேரத்தில் செல்ல முடியும். அதேபோல, சில மணி நேரத்தில் சமவெளி பகுதிக்கு சென்றடைய முடியும்.

கூடலூரிலிருந்து உதகைக்கு செல்ல சுமாா் இரண்டரை மணி நேரம் பயணிக்க வேண்டும். அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்றடைய இரண்டு மணி நேரம் பயணிக்க வேண்டும். எனவே பல்நோக்கு ஆய்வகத்தை கூடலூா் அரசு மருத்துமனையில் அமைக்க வேண்டும். இல்லையெனில் இப்பகுதி மக்கள் தொடா்ந்து அலைக்கழிக்கப்படுவாா்கள்.

இந்த பகுதியின் முக்கதியத்தை உணா்ந்தும், பொதுமக்களின் நலன் கருதியும் ஆய்வகத்தை கூடலூா் அரசு மருத்துவமனையில் அமைக்க வேண்டும் என்று ஓவேலி மக்கள் இயக்கத்தின் அமைப்பாளா் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com