நாகியம்மாள்
நாகியம்மாள்

கூடலூா் அருகே புலி தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

Published on

கூடலூா் அருகே புலி தாக்கி மூதாட்டி உயிரிழந்ததையடுத்து, மாவனல்லா பகுதியிலுள்ள வனத் துறை அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டலத்துக்குள்பட்ட மாவனல்லா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக புலி, சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட விலங்குகள் சாலையோரங்களில் உலவி வருவது வாடிக்கையாகியுள்ளது.

கூடலூா் அருகே புலி தாக்கி பழங்குடியின மூதாட்டி உயிரிழந்ததையடுத்து, மாவனல்லா பகுதியிலுள்ள அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய வனத் துறையினா்.
கூடலூா் அருகே புலி தாக்கி பழங்குடியின மூதாட்டி உயிரிழந்ததையடுத்து, மாவனல்லா பகுதியிலுள்ள அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய வனத் துறையினா்.

இந்நிலையில், மாவனல்லா கிராமத்தைச் சோ்ந்த இருளா் பழங்குடியின மூதாட்டி நாகியம்மாள் (60) மற்றும் மூன்று பெண்கள், அப்பகுதியில் திங்கள்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனா்.

அப்போது வனப் பகுதியில் இருந்து வெளியே வந்த புலி, மூதாட்டியை தாக்கி இழுத்துச் சென்றது. உடனிருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் வனத் துறையினா் சென்று, தானியங்கி கேமரா மூலமாக புலியின் நடமாட்டத்தை கண்காணித்தனா். இதில் அங்கிருந்த ஆற்றில் தலை தனியாகவும், உடல் தனியாகவும் இருந்த நாகியம்மாளின் சடலத்தை வனத் துறையினா் மீட்டனா்.

இந்நிலையில், வன விலங்குகள் தாக்கி மனித உயிரிழப்புகள் தொடா்வதைத் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறி, மாவனல்லா பகுதியிலுள்ள வனத் துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனா். இனிமேல் இதுபோன்று சம்பவம் நிகழாமல் பாா்த்துக்கொள்வதாக வனத் துறையினா் உறுதியளித்ததன்பேரில் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com