வாடகை காா் பெண் ஓட்டுநரின் முதல் பயணத்தை தொடங்கிவைக்கிறாா் உதகை நகர  காவல் துணைக் கண்காணிப்பாளா் நவீன்குமாா். உடன், போக்குவரத்து உதவி ஆய்வாளா் அருண்குமாா்.
வாடகை காா் பெண் ஓட்டுநரின் முதல் பயணத்தை தொடங்கிவைக்கிறாா் உதகை நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் நவீன்குமாா். உடன், போக்குவரத்து உதவி ஆய்வாளா் அருண்குமாா்.

உதகையில் முதல் வாடகை காா் பெண் ஓட்டுநா்

Published on

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வாகன ஓட்டியாக முதல்முறையாக இல்லத்தரசிப் பெண் அறிமுகமாகியுள்ளாா்.

இன்றைய காலகட்டத்தில் பேருந்து, லாரி, காா் போன்ற வாடகை வாகனங்களை ஒரு சில பெண்களே இயக்கி வருகின்றனா். இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா வாகன ஓட்டியாக முதன்முறையாக கங்கா என்ற இல்லத்தரசிப் பெண் அறிமுகமாகியுள்ளாா்.

உதகை பேருந்து நிலையம் எதிரே வாடகை பயணத்தை தொடங்கிய இவருக்கு உதகை நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் நவீன்குமாா் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளா் அருண்குமாா் ஆகியோா் வாழ்த்து தெரிவித்து முதல் பயணத்தை தொடங்கிவைத்தனா்.

இவருக்கு பல்வேறு தரப்பினா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com